Thursday, February 13, 2014

அவன் மறக்காத அவளுக்கு

பார்த்து, பேசி, பழகி புரிந்துகொண்ட இருவர்.
ஒருவரை ஒருவர் பிரிந்தோ மறந்தோ வாழமுடியாத 
ஒருவித உணர்வு தான் காதல்.

அந்த ஒரு உன்னதமான உணர்வை 
அவனை பார்க்காமல் பேசாமல் பழகாமல் 
புரிந்துகொள்ளாமல் பிரிந்துசென்று புரியவைத்த
அவன் மறக்காத அவளுக்காக!

அன்று,
அவன் உன்மேல் கொண்டது
காதல் என்றால் அது மெய்யாகிடுமா?

நாளை,
காதலின் தீபம் அதனை - காற்றால் 
அணையா இடத்தில் தினம்தினம் ஏற்றும் 
ஒரு நாள் முதல் நாள் வருமே
அன்று முதல் ஆரம்பம் என்றால் 
அது பொய்யாகாதா?

இன்று,சொன்னால் தான் காதலா? - ஒரு
வார்த்தைகூட பேசாமலும் காதல் - உண்டா?
அது ஒருதலை காதலென்றால் - அதை 
காதல் எனலாமா? காதல் - என்றெண்ணி
அவளிடம் கூறாமல் இருக்கலாமா? - அதை
அவள் கேட்க மறுக்கலாமா? - இது விதியா?

முதல்முறை பார்க்க நேரிட்டது - இருவரும்
சேர்ந்து எடுத்த முடிவா? - அவன் 
உன்னிடம் முதல்முறை பேசியதில் அன்றோ - அவனே
உணர்கிறான்; உணர்வுக்கு உருகி அவனையும் மறக்கிறான்.

மறந்தவன் உலகமே இருந்தும் - உன்னிடம்
பேசுகிறான்; மறுமுறை, இரண்டாமுறையாக! - நீயோ
விளையாட்டாய் விடை அளிக்க - மனமுடைகிறான் !
மறுமுறை உன்னிடம் பேச - முடியாமலா?

எப்படி பேசவேண்டும் என்பதறியாமல் - ஒருமுறை
செய்த தவறை உன்னிடம் - மறுமுறைசெய்ய
அவன் மனம் - உன்
முன்வராது தவித்தது உனக்கு - தெரியுமா?

உன்னிடம் தெருவிக்கமுடியாமல் அவன் - அவனையே
அறியாமல் தவறு செய்கிறான் - உன்னை
நினைத்து கவலையும் கொள்கிறான் - உலகம் 
தெரியாத வயது அவனின் - குற்றமா?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் - குற்றமே
ஆயினும் கண்திறக்கா நிலைஅன்றோ - அன்று 
அவனுக்கு கண்திறக்க சற்று தாமதமாக - உன்னை 
அவனிடம் இருந்து பிரித்தனரே?

நீர் இன்றி அமையாது உலகு 
நீயும் நிந்தான் நினைவும் இன்றி அவனா?

பிரிந்த உன்னை மறந்துவாழ - அவன் 
அவனை உணர்கிறான் அரைகுறையாக - இன்று
அவன் பேசவும் உலகமும் - உணர்ந்தானோ?
உன்முன் வர அனுமதி - தாராயோ?

நீ இன்றி அவனின் வாழ்வும் - அவன் 
இன்றி உந்தன் வாழ்வும் - கேள்விக் குறியாகாதோ?
அவனுக்கு அவனையும் காதலையும் புரியவைத்த நீ 
இன்று அதன் அன்பையும் ஆழத்தையும் பார்க்க மறுப்பதேனோ!

சொல்ல வாய்ப்பளிப்பது - உன் கையில் இருந்தும், 
அதை காதுகொடுத்து கேளாமல் - விலகிபோகக் காரணம் என்னவோ?

உன்னை அவன் புரிந்து கொண்ட அளவுக்கு – நீ
அவனை புரிந்துகொள்ள வேண்டாமோ?!
விட்டு விலகாமல் விடை கொடு -அதற்க்கு
முன் வாய்ப்பளி!
அங்ஙனம் செய்ய உன் பெற்றோர் மறுப்பின் – 
மறுபிறவி இருப்பதை அவன் அறிவான்!

மறுக்க ஒரு கணம் - அதுவும் இல்லை என்றால்?
மணந்து வாழ மறு ஜென்மமா?
மதி மயங்கி இல்லாமல் - மலர்தூவி வாழ்தாதோ இவ்வையகம்!

இவனும் உன்னைப்போல் மனிதன்தானே- 
கடவுள் பாதி, மிருகம் பாதி! என்றால்
உன்னை மருபாதியாக்க விரும்புபவன். 
விருப்பத்தை கூற வாய்ப்பளித்து - விடைகொடு!
அது எதுவாயினும் - நம் கையில் இல்லை;
ஏன்? என்றால் நீ ஏவாளும் இல்லை - அவன் ஆதாமும் இல்லை!

விட்டு விலகாமல் விரோதியாய் நினைக்காமல்
விருப்பம் கூற வாய்ப்புகொடு.
கொடுத்துப்பார் - கேட்ப்பவனை நீ அறிவாய்!
அறியாமை ஆபத்தன்றோ - அவ்ஆபத்து உனக்கா? 
அவன் மணம் தாங்காதடி - தண்டிக்காதே 
ஒரு பாவமும் செய்யா அம்மிருகத்தை!.
 அம்மிருகத்தை,
முழ மனிதனாக்க ஒரு முறை - உன்
முழுநிலவு முகம் காட்டிட வேண்டாமோ?

அவளின் கைசேர?,
அவன் கையறுத்து குருதிசொட்ட உறுதியளிக்க வேண்டுமா 
அவனின் கைசேர,
நீ பிறப்புஎடுத்த வீடுவிட உந்தன் மனம் வாராததோ? 

கேள்வியில் முடிகிறது இக்கவிதை - அவனின்
காதலோ? - அவள் கேட்டகாமல் முடிய வேண்டுமா?

அவிளின் குற்றம் என்றிருப்பதா ? - ஐயோ!
சொன்னால் தான் காதலென்றால் - எப்படி சொல்வது?
அவள் அனுமதி இன்றி -
அவள் எண்ணம் போல் வாழவிரும்பும்
அவனின் காதலின் ஆழம் - அதுவன்றோ!

அவன் மறக்காத அவளுக்கு,
கேள்வியில் முடிகிறது இக்கவிதை - அவனின்
காதலோ? - அவள் கேட்டகாமல் முடிய வேண்டுமா?

Febraury, 14 - 2014 
Valentine's Day