முழு நிலவும் வந்து வழியனுப்ப
துவங்கியது என் பயணம்,
முந்நூறு மையில் கடந்து!
துயில் எழுந்தேன்- காலை கதிரவன் வரவேற்பில்.
கண் முன் தெரிந்தது,
நான் பலமுறை நடந்த பாதை!
என்னை போல் ஒருவராய்!
என் எதிர் நடந்தனர்!
என் ஊர் மாணாக்கர்.
இன்றும் காலில் காலனி இன்றி.
இரு மையில் தூரம்!
இவ்விருபது ஆண்டுகளில் என் இந்தியா!!
நான்,
உன்னை போல் ஒருவன்.