Friday, May 18, 2012

என்றும் அழியா செல்வம் கல்வி

என்றும் அழியா செல்வம் கல்வி!
அன்று, மதி மலர உதவ - உருவானது பள்ளி!
இன்று, பணம் பார்க்க நினைக்கிறான் - படிக்கற்கள் கட்டுகிறான்!
கற்று கொடுக்க - காசு கேட்கிறான்!
எண்ணாமல் எழுதியதையும் - எண்ணிப்பார்த்து மதிப்பெண் என்கிறான்!
மதியை மதிப்பிடுகிறான் - மனமுடைந்திடதே!
எடுக்கும் மதிப்பெண்கொண்டு - எடை போடாதே!
பாதியில் பாதை மாறிடதே - பதினாங்காண்டாவது படி!
புரிந்து படி - புத்தகம் உலகமாகும்!
உலகம் புரியும் - நடப்பது தெரியும்!
தெரிந்து நடப்பாய் - நினைத்தது நடக்கும்!
உலகிற்கு உதவுவாய் - பசி தீரும், தீமை ஒழியும்!
உள்ளம் உறங்காதிரு - கனவு மெய்ப்படும்!
உளவரை வளர்வாய் - வளமுடன் வாழ்வாய்!
திங்கள் வழியனுப்பும் - ஞாயிறு வரவேற்கும்!
திசை தெளியும் - வருவது விளங்கும்!
முடிவு எடு - முயற்சி செய்!
முதலில் படி - மதி மலரும்!
மக்கள் மகிழ்வர் - பெருமிதம் கொள்வர்!
நடுநடுவே வியப்பாய் - கேள்வி கேட்பாய்
கேட்பது கிடைக்கும் - விரைந்து செல்வாய்,
நம்பிக்கை கொள்வாய் - உன்னால் முடியும்
முடித்துக்  காட்டு - எடுத்துக்காட்டு ஆவாய்!

நான்,
உன்னை
போல் ஒருவன்.